நியூ ஜெர்சி தமிழ் சங்கமும், நியூ ஜெர்சி தமிழ் பள்ளிகளும் இணைந்து, கடந்த நவம்பர் 19, 2017 அன்று குழந்தைகள் தின விழா மிக சிறப்பாக கொண்டாடினர் . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் தனது தமிழ் மொழி எழுதும், படிக்கும். மற்றும் பேசும் திறனை வெளிப்படுத்தும் வகையில் நடந்த போட்டிகளில் திரளாக கலந்து கொண்டனர். அனைத்து பள்ளிகளில் இருந்து சுமார் 400 குழந்தைகள் பங்கேற்றனர்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குழந்தைதைகளுக்கான தமிழ் பேச்சுப் போட்டி, திருக்குறள் தேனீ, வார்த்தை எழுத்து விளையாட்டு, விளம்பர போட்டி என்று பல போட்டிகள் நடத்தப்பட்டது. பெரியவர்கள் பங்கேற்க தமிழ் நாடு பற்றிய வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பெற்றது.

அனைத்துப்  போட்டிகளிலும் நமது மாணவர்கள் மிக அதிக அளவில் பரிசுகளை வென்றனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெரியவர்களுக்கான வினாடி வினா  நிகழ்ச்சியிலும் நமது பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் 2 அணிகளாக  கலந்து கொண்டு இருவருமே வெற்றியும் பெற்றனர்.

photo courtesy : Sivakumar Shanmugham